
வங்கக்கடலில் உருவான டானா புயல் என்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே பூரி-சாகர் இடையே கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் தற்போது ஒடிசாவில் உள்ள பாரதீப் பகுதியிலிருந்து 280 கிலோ மீட்டர் வேகத்தில் நரகர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவிலிருந்து 370 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.