
மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். இந்த விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்தார். அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளதா நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் இதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கோவி. செழியன் கூறியதாவது, ஆளுநருடன் மோதல் போக்கை உற்சாகப்படுத்தி மாநில வளர்ச்சிக்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்.
ஆளுநருடன் தொடர்பு என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு தான் உறுதுணையாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் ஆளுநருடன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். ஆனால் தற்போது தமிழ் தாய் வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநரின் செயலும், அவருடைய பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி அமைந்துள்ளது. மேலும் இதனால் தான் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்று நான் முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.