விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் கட் அவுட்டுகள் பேனர்கள், அழைப்புகள் என தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். மாநாடு நடைபெறும் இடத்தில் பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் கர்மவீரர் காமராஜர், தந்தை பெரியார், அண்ணன் அம்பேத்கர் ஆகியோரது 75 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்டுகள் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நடுவே விஜயின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தியாகி அஞ்சலையம்மாள், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரது கட் அவுட் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.