விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், வாகனங்களின் மேல் அமர்ந்து கொடி பிடித்து வரக்கூடாது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் பெறவில்லை. மாநாடு முழுவதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். மின்வாரியத்திற்கு பணம் செலுத்தியதால் மாநாட்டு திடலில் இருக்கும் மின் கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது என  மின்வாரிய தலைமை பொறியாளர் மணிமேகலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.