
இந்திய ரயில்வே மிகப்பெரிய சேவை வழங்கும் அமைப்பாகும். மேலும் இது பொதுத்துறை நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய ரயில்களில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே துறையின் அதன் பயணிகளுக்கு 6 சிறந்த வசதிகளை இலவசமாக வழங்குகின்றது. அதனை பற்றி பின்வருமாறு காணலாம்.
- இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகை பயண சீட்டுகளை அறிவித்து பல வசதிகளை இலவசமாக வழங்குகின்றது.
- ரயில்வே தனது பயணிகளுக்கு ஏதுவாக 6 ஆயிரம் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- மேலும் ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வை, கம்பளி மற்றும் தலையணை ஆகியவற்றை இலவசமாக வழங்குகின்றது.
- முக்கிய ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 1 மாதம் வரை அவர்களின் பொருள்களை இலவசமாக ரயில்களில் உள்ள லாக்கரில் வைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மேலும் ரயில் பயணத்தின் போது ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தால் அவசர காலங்களில் மருத்துவர் மற்றும் பிற மருத்துவ உதவிகளையும் வழங்குவதோடு, ஆபத்தான சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை போக்குவரத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கின்றது.
- அதோடு உங்கள் ரயில் தாமதமாகி நீங்கள் ரயில்வே நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் காத்திருப்போர் அறையில் ரயில் வரும் வரை காத்திருக்க ஏற்பாடு செய்துள்ளது.