நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ள “தமிழக வெற்றிக் கழக”த்தின் முதல் மாநில மாநாடு அரசியல் வட்டாரத்தில் பரவலான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை பிப்ரவரி மாதம் தொடங்கியிருந்தார். அதன் பின்பு கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில்,  விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்த மாநாட்டிற்கு தமிழக அரசிடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் தன்னை வலுவாக நிலைநிறுத்த முயலும் நடிகர் விஜயின் அரசியல் கட்சிக்கு பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விருப்பத்தோடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாஜக சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது, விஜய் ரசிகர்களையும் பொது மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜயின் கட்சிக்கான இந்த மாநாடு இடையூறு இன்றி நடைபெற வேண்டும் எனவும், தமிழ் மக்களுக்கு ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனும் பாஜகவின் கருத்தும் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவு பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே 2026 தேர்தல் நேரத்தில் உறுதியான கூட்டணி அமைவதற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.