பிலிப்பைன்ஸ் நாட்டில் டிராமி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலினால் 126 பேர் வரை பலியாகியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை புயல் கரையை கடந்த போதிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கன மழையால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

மேலும் இதுவரை 126 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.