தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை எந்த இடத்தில் நடைபெற உள்ள நிலையில் காலை முதலே தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜயும் முன்னதாகவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று விட்டார். இப்போது அந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் காத்திருப்பதால் அடிக்கடி தொண்டர்கள் மயங்கி விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இருப்பினும் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. குழந்தைகள் கூட சிலர் மயங்கி விழுந்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொண்டர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் தற்போது  90 சதவீதம் இருக்கைகள் முழுமை அடைந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஐம்பதாயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. இப்போதே 90 சதவீதம் நிறைவடைந்து விட்டால் இன்னும் மாநாட்டுக்கு தொண்டர்கள் வரும் நிலையில் அவர்கள் உட்கார கண்டிப்பாக இடம் இருக்காது. மேலும் கண்டிப்பாக மாநாடு நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கானோர் வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு தனியார் பவுன்ர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.