
ஆந்திரா மாநிலம் முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது தங்கைக்கும் ஓ.எஸ் ஷர்மிளாவுக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டது. அவருடைய தந்தையான ராஜசேகர் ரெட்டிக்கு சொந்தமான சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன பங்குகள் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்குகள் தற்போது நிலவையில் உள்ளது. இது குறித்து ஷர்மிளா அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல தியாகங்கள் செய்தேன். பாதயாத்திரை நடந்த போது முழு அர்ப்பணிப்போடு நடந்து கொண்டேன்.
இவர் முதல் மந்திரி ஆவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் நான் அயராது உழைத்தேன். வெற்றிக்காக நாங்கள் எல்லாவற்றையும் செய்தோம். ஆனால் அவர் எனக்கு என்ன செய்தார். எனக்கும், என்னுடைய குழந்தைகளுக்கும் அநீதி இழைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நான் வீட்டிற்குள் அடைக்கப்பட்டு இருந்தேன். என்னை அவர் கோர்ட்டுக்கு இழுத்து சென்றார். இது நியாயமா? எங்கள் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள், அவர் விருப்பப்படியே பிரித்து வழங்க வேண்டும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீதி வெல்லும். இவ்வாறு அவர் பேசியதற்கு பிறகு கண்கலங்கினார்.