உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பள்ளி மாணவர்கள் எலக்ட்ரிக் ரிக்ஷா மூலம் பயணம் செய்து பள்ளிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் ரிக்ஷாவின் கூரையின் மீது உட்கார்ந்து பயணம் செய்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

ஆபத்தான முறையில் இவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானதை தொடர்ந்து, இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.