
தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அவர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அதன் பிறகு டாஸ்மாக் கடை ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என பலருக்கும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இவர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக மெட்ரோ ரயில்வே நிலைய ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மெட்ரோ ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் Non executive பணியாளர்களுக்கு 13,000 வரை போனஸ் வழங்கப்பட உள்ளது. மேலும் மெட்ரோ ரயில்வே நிலைய ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று சிஐடியூ-மெட்ரோ ரயில்வே நிலைய சங்கம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கையை தற்போது ஏற்று போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.