சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனசாக 15 ஆயிரம் வழங்கும் மெட்ரோ நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் non executive பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.