தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மேஜர் முகுந்த் வரதராஜன் உண்மை கதாபாத்திர சம்பவத்தில் உருவான அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்த திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில் பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், துணை முதல்வர் உதயநிதி மற்றும் பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் அமரன் பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகூர்த்த வரதராஜன் வாழ்க்கை கதாபாத்திரத்தை அப்படியே உண்மை தத்துரூபமாக கண்முன்னே கொண்டு வந்ததாகவும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இப்படிப்பட்ட உண்மை கதைகளை கொண்டு வந்ததற்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துள்ளார். நாட்டை பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு இந்த படம் அர்ப்பணம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் இன்று அமரன் படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழுந்து அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.