இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சமீபத்திய வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று நாளை திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.