டெல்லியை சேர்ந்த ரெடிட் பயனர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அந்த பிரியாணியை டெலிவரி பண்ண வந்த நபர் ஆர்டர் செய்த நபரிடம் otp வாங்கிவிட்டு உணவையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லாமல் மாறாக கடுமையாக பேசத் துவங்கியுள்ளார்.

தீபாவளி போன்ற விழா நாட்களில் எப்படி சிக்கன் பிரியாணி சாப்பிடலாம்? சிக்கன் மட்டன் போன்றவற்றை இது போன்ற நாட்களில் சாப்பிடக்கூடாது. தீபாவளி முடிந்த பிறகு சாப்பிடுங்கள் என்று கடுமையாக பேசியுள்ளார். இதனை ஆர்டர் செய்த நபர் ரெடிட் தளத்தில் ஆதங்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அந்த நபரை யாருக்கும் சிக்கன் மட்டன் போன்றவற்றை டெலிவரி செய்ய வேண்டாம் என்று கூறுங்கள் என்றும், சிலர் அவரது நம்பிக்கையை எதற்காக அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.