
மக்களுக்கு பொதுவாக நகை மீதான ஆர்வம் ஒருபோதும் குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு தங்கத்தின் விலை அதன் உச்சத்தை அடைந்துள்ளது. படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது ரூபாய் 59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்கள், தீபாவளியை ஒட்டி நகை விற்பனை அமோகமாக நடந்து கொண்டு வருகிறது. இதுகுறித்து தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷாலினி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தங்க விலை தொடர்ந்து ஏற்றத்துடனே இருப்பதால் இந்த ஆண்டு தீபாவளிக்கு தங்க விற்பனை சற்று குறைவாக தான் உள்ளது.
தங்கத்தின் விலை தீபாவளிக்கு முதல் நாள் வரை ஏற்றத்துடனே இருந்தது. ஆனால் நேற்று சற்று குறைந்து காணப்பட்டது. 1 கிராம் தங்கத்தின் விலை 7,455 க்கு விற்கப்பட்டது.1 பவுன் 59,640 க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 1 கிராம் தங்கம்7,385 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 1 பவுன்59,080 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்து காணப்பட்டது. 1 கிராமுக்கு 3 ரூபாயும், 1 கிலோவுக்கு 3000 ரூபாயும் குறைந்து காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,06,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.