மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் வேதனையை அளித்துள்ளது. திண்டோரி மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமம் உள்ளது. அங்கு நிலப்பிரச்சனை காரணமாக நான்கு ஆண்களை கொலை முயற்சி செய்து உள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் துரிதஷ்டவசமாக தந்தை மற்றும் ஒரு மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து தன் கணவரை இழந்த 5 மாத கர்ப்பிணி பெண்ணை தன் கணவன் படுத்திருந்த கட்டிலில் இரத்தம் இருந்ததால் அதை துடைக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். அங்குள்ளவர் சிறிய தாளை எடுத்துக் வீசி இதை வைத்து மீண்டும் தொடைக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனை அருகில் உள்ளவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

கணவனை இழந்த 5 மாத கர்ப்பிணி பெண்ணை சிறிதும் இரக்கம் இல்லாமல் வேலை ஏவிய இந்த மருத்துவமனை அரசு மருத்துவமனை என குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ அதிக நபர்களால் பகிர்ந்து தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றன.