திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த வாரம் ரூ.2000 கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரன் தனது வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் பின் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பிய அவர், மது போதையில் இருந்த மணிகண்டனிடம் தான் கொடுத்த 2000 ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

அப்போது மணிகண்டன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கோடீஸ்வரனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மணிகண்டன் தப்பி ஓடிய நிலையில், அவருடன் இருந்த 3 பேரையும் காவல்துறையினர் விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.