டெல்லியில் ஆகாஷ் சர்மா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தரகர். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தீபாவளி பண்டிகையின் போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரை துப்பாக்கியால் பயங்கரமாக சுட்டு விட்டு சென்றனர். இதில் அவர் உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் கிரிஷ் (13) இதில் படுகாயம் அடைந்துள்ளார்.

அதோடு இந்த சம்பவத்தில் ஆகாஷின் மருமகனான ரிஷப் என்ற 16 வயது சிறுவனும் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்கூட்டியில் வந்த நபர்  ஆகாஷின் காலை தொடுவது போல் அதாவது ஆசிர்வாதம் வாங்குவது போல் நெருங்கி வந்தார். ஆனால் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு அவர்களை கொலை செய்துவிட்டார். மேலும் குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் சிசிடிவி காட்சிகள் பதைபதைக்க வைத்துள்ளது.