சென்னை பனையூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதாவது முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நடிகர் விஜயின் கொள்கைகளை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக நேற்று சீமான் நடிகர் விஜய் மற்றும் அவருடைய கட்சியின் கொள்கைகளை சரமாரியாக விமர்சித்தார். அதாவது விஜயின் கொள்கைகள் அழுகிய கூமுட்டை என்றும் தெளிவான கொள்கைகள் அவரிடம் இல்லை என்றும் மோசமாக விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை பனையூரில் இன்று அவசர ஆலோசனை கூட்டை நடைபெறும் என்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது சென்னை பனையூர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்திற்காக அனைவரும் வந்துவிட்டனர். மேலும் சற்று நேரத்தில் சென்னை அலுவலகத்திற்கு நடிகர் விஜயையும் வருகை தர உள்ளார். அவர் முதல் மாநாடு மற்றும் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்றவைகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.