டெல்லியில்கடந்த  31 ஆம் தேதி அதாவது தீபாவளி பண்டிகையின் போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது டெல்லியில் ஒரு கணவன் மனைவி வசித்து வருகிறார்கள். இருவருக்குமே இது மூன்றாம் திருமணமாகும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அதாவது கடந்த 31ஆம் தேதி கணவன் குடித்துவிட்டு மனைவியுடன் கடுமையாக தகராறு செய்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அந்த மனைவி நள்ளிரவில் கணவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அந்த கணவனுக்கு அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் காவல் நிலையத்தில் தன் மனைவி மீது புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மனைவியை வலைவீசி தேடி வருகிறார்கள்.