
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் உதகை மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் சேவைகள் நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.