
தீபாவளி பண்டிகை கடந்த 31-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெடி வெடிக்கிறோம் என்ற பெயரில் சிலர் வினோதமான முயற்சியில் இறங்கி ஆபத்தை சந்திக்கின்றனர். அந்த வகையில் காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. கருப்பு நிற ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடித்துள்ளனர். இந்த சம்பவம் சண்டிகரில் நடைபெற்றதாக தெரிகிறது.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சண்டிகர் உட்பட வட இந்தியாவின் பல நகரங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து காற்றின் தரம் மோசமானது குறிப்பிடத்தக்கதாகும்.
चंडीगढ़ का ये वायरल वीडियो सेक्टर 22 इनर मार्केट रोड का है. दिवाली से पहले का है वीडियो, जांच में जुटी पुलिस.#Chandigarh #ViralVideo pic.twitter.com/fnQMbr1dpP
— AajTak (@aajtak) November 2, 2024