ஒரு வாலிபர் பிரதமர் அலுவலகத்திற்கு போலி மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பி உள்ளார். சமீப காலமாக விமானங்கள், ஹோட்டல்கள் என நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு 35 வயது ஆகிறது. ஜெகதீஷ் பிரதமர் அலுவலகம், ரயில்கள், விமானங்கள் என தொடர்ச்சியாக போலி ஈமெயில் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெகதீஷ் பயங்கரவாதம் குறித்து டெரரிசம்- டிமானிக் ஸ்ட்ராம் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கு முதலில் புத்தகத்தை வெளியிட உதவுமாறு மெயில் அனுப்பியுள்ளார் ஜெகதீஷ். அதற்கு பதில் வராததால் இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் என்பது உள்ளிட்ட போலி மிரட்டல் மெயில்களை அனுப்பி அச்சுறுத்தியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.