மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரோகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவிக்கு சேலை வாங்குவதற்காக ஒரு ஜவுளி கடைக்கு சென்றார். அப்போது கடையில் இருந்த ஊழியர் ஒருவர் சேலையை எடுத்துக் காண்பிக்கவா Uncle எனக் கேட்டுள்ளார். அதோடு நீண்ட நேரமாக அவர் சேலையை பார்த்துக் கொண்டிருந்ததால் எந்த விலைக்கு சேலை எடுக்க வேண்டும் என்று அந்த கடை ஊழியர் விஷால் கேட்டுள்ளார்.

அதோடு அவருடைய மனைவியின் முன்பாக Uncle என்றும் கூறினார். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான ரோகித் தன்னுடைய நண்பர்களுடன் வந்து விஷாலை அடித்துள்ளார். அவரை தர்ம அடித்த நிலையில் பின்னர் ரோஹித் மற்றும் அவருடைய நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் இது  தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.