
வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் ஜார்கண்ட் மாநிலம் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் வழியாக தான் இந்தியாவிற்குள் வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஹேமந்த் சோரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எந்த அடிப்படையில் மத்திய அரசு அடைக்கலம் கொடுத்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.