
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற டிசம்பர் மாதம் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பிசிசிஐ புதிய செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி, அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டது.
இந்நிலைவில் தற்போது ரோகன் ஜெட்லி புதிய பிசிசிஐ செயலாளராக நியமிக்க பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது