
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தைப்பூசத்துக்கு மகர விளக்கு தரிசனம் போன்ற நிகழ்வுகளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், கேரள காவல்துறை மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு பக்தர்களின் பாதுகாப்பு, நலனை கவனித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டில் முதல் முறையாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ரூ.5 லட்சம் காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளனர். இலவச காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற பெயரில் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலமாக தகவல்களை கேட்டு பணம் கேட்பதாக புகார்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிலர் செயல்முறை கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்ட செலவுகளைக் கொடுக்க வேண்டும் என்று கூறி பக்தர்களிடம் பணம் கேட்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தில் எந்தவித கட்டணம் அல்லது வரிகளும் சேர்க்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். இவ்வகையான மோசடிகளை தடுக்க புதுச்சேரி காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் 1930 என்ற சைபர் உதவி எண்னை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.