
சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சஞ்சய்குமார், நடிகர் கமல்ஹாசனின் 70ஆவது பிறந்தநாளுக்காக 3500 தீக்குச்சிகளால் அவரின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கி பெரும் கவனம் பெற்றுள்ளார். வாய் பேச முடியாத இவர், 22 மணி நேரம் செலவழித்து இச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார்.
சஞ்சய்குமார் தனது தந்தை ரவிக்குமாரைப் போலவே கமல்ஹாசனின் தீவிர ரசிகர். ரவிக்குமார் இதற்கு முன்னர் கமல்ஹாசனின் பிறந்தநாளில் பல வித்தியாசமான ஓவியங்களை செய்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டும், கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சிறப்பு வாழ்த்து தெரிவிக்க, சஞ்சய்குமார் தீக்குச்சிகளை கொண்டு உருவாக்கிய ஓவியத்தை அவரை நேரில் சந்தித்து வழங்க திட்டமிட்டுள்ளார்.