தமிழக அரசு பொதுமக்களுக்கான ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாமை நவம்பர் 9-ஆம் தேதி நடத்தவுள்ளது. இதன் மூலம், ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய விரும்பும் நபர்கள் புதிய உறுப்பினரைச் சேர்க்கவும், பெயர் நீக்கவும், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற சேவைகளை பெறலாம். சென்னை மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் குறை தீர்ப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில், ரேஷன் பொருட்கள் விநியோகம், ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்பான புகார்களைப் பதிவுசெய்யவும் வசதி உண்டு. குறிப்பாக, ரேஷன் அட்டையில் ஏற்பட்டுள்ள தாமதம், சரியான பொருட்களை பெற முடியாத நிலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வயதானவர்களும்,  உடல் ஊனமுற்றவர்களும் சேவையை விரைவாக பெற அங்கீகாரச் சான்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்கும் சிரமத்தை தவிர்க்க முடியும்.