வெள்ளானுர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி(67) ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்றதுடன், ஆவடி தனியார் கல்லூரியில் உதவி பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். நவம்பர் 3ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே திடீரென வந்த மாடு மோதி அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்ததை அடுத்து, ஆவடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.