
பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை உட்கட்டமைப்பு வசதிகள் அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கண்காணிப்பு தீவரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.