மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு வருகிற 20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மகராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக தற்போது ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். இவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் தானாக பேசாமல் அருகில் இருக்கும் ஒருவர் கூறியதை அப்படியே பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதாவது அவர் ஒரு பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது பாஜக பிரமுகர் அரசு திட்டங்களை பெயர்களுடன் ஒவ்வொன்றாக சொல்லுகிறார். இதனை அப்படியே கேட்டு ஏக்நாத் ஷிண்டே ஒப்பிக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.