
சென்னை கண்ணகி நகரில் நிஷாந்தி -ஆரோக்கியதாஸ் தம்பதியின வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த 45 நாட்களை ஆன குழந்தையை பெண் ஒருவர் அரசு நிதி உதவி வாங்கி தருவதாக கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து நிஷாந்தினி தியாகராய நகரிலுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வைத்துவிட்டு அவர் கைகழுவ சென்ற பின்னர் குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த பெண் தப்பி ஓடி உள்ளார். குழந்தை காணாமல் போன பரிதவிப்பில் தாய் கதறி அழுது கொண்டே கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையே திருவேற்காட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் கை குழந்தையுடன் வலிப்பு நோய் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தையின் பிறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு முன்னுக்கு முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தற்போது திருவேற்காடு காவல்துறையினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கண்ணகி நகர் காவல் துறையினர் குழந்தையை கைப் பற்றியதோடு காணாமல் போன குழந்தை தானா என்பதை உறுதி செய்ய பெற்றோரை வரவழைத்துள்ளனர். குழந்தை அவர்களோடது தான் என தெரிய வந்த பின்பு குழந்தையை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.