தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது மாநிலம் முழுவதும் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக கள ஆய்வுகள் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று அரியலூரில் கள ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் 15,000 பேருக்கு வேலை வழங்கும் ஒரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் அரியலூரில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் பேசினார். அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை புகழ்ந்தார். அதோடு அவருக்கு ஒரு புதிய பட்டப் பெயரும் சூட்டினார். அதாவது பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டபோது அதற்கு தீர்வை தேடி தந்தவர் அமைச்சர் சிவசங்கர் என்றார். அதன்பிறகு திமுக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சிவசங்கருக்கு அரியலூர் அரிமா என்று பெயர் வழங்கினார்.

மேலும் அரியலூர் அரிமா என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் அடைமொழி சூட்டியது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 3 வருடங்களுக்கு முன் சென்னையிலிருந்து பண்டிகை காலங்களில் போது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அப்போது உடனடியாக அந்த சிக்கலை தீர்த்து வைத்தவர் அமைச்சர் சிவசங்கர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த சிக்கலை தீர்த்து வைத்தவர் அமைச்சர் சிவசங்கர்தான். எனவே அவர் பாராட்டுக்கு உரியவர். சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் கடைசி பேருந்து கிளம்பிய பிறகு தான் நான் அரியலூருக்கு செல்லுவேன் என்று அவர் கூறினார் என்றும் பெருமிதம் கொண்டார்.