
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவோணம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஆர் வினோத் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு திருநங்கையின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் அவர் அத்துமீறி நுழைந்ததோடு பாலியல் தொல்லை கொடுத்ததுள்ளார்.
இது தொடர்பாக தற்போது தான் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை அதிகாரிகள் பணி நீக்கம் செய்த நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்த உத்தரவை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்துள்ளார்.