
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்.ஆர் பாளையம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கருணாமூர்த்தி(22), தட்சிணாமூர்த்தி(20) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.இதில் கருணாமூர்த்தி தனுடன் கல்லூரியில் படித்த ஸ்வேதா(22) என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்டார். கருணாமூர்த்தி செங்கல்பட்டில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பாண்டியன் வெளியூரில் வேலை பார்க்கிறார்.
தட்சிணாமூர்த்தி உறவினர் வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வந்துள்ளார். அக்டோபர் 30ஆம் தேதி ரமணி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணி உயிரிழந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் தட்சிணாமூர்த்தி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுவேதாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. ஸ்வேதாவுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
திருமணத்திற்கு பிறகு கருணாமூர்த்தி வெளியூரில் தங்கியுள்ளார். ரமணி கூலி வேலைக்கு சென்று மாலை தான் வீட்டிற்கு வருவார். இதற்கிடையே ஸ்வேதாவும் சதீஷ்குமாரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். சதீஷ்குமார் ஸ்வேதாவிடம் அன்பாக பேசி பழகி உள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு பலமுறை அழைத்து சென்றுள்ளார். ஒருமுறை சுவேதாவும் சதீஷ்குமார் உல்லாசமாக இருந்ததை ரமணி நேரில் பார்த்தார்.
உடனே ஸ்வேதாவே கடுமையாக பேசி கருணாமூர்த்தி ஊருக்கு வரும்போது நடந்தவற்றை கூறி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் திட்டமிட்டு சுவேதாவும் சதீஷ்குமார் இணைந்து தூக்க மாத்திரைகளை பவுடராக்கி ப்ரைட் ரைசில் கலந்து ரமணிக்கு கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர் தூங்கிவிட்டார். பின்னர் அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என ஊரையே கூட்டி சுவேதா நாடகமாடியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.