வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை கிண்டியில் அவரது சிலைக்கு பா.ஜனதா முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னையில் நடைபெற்ற நிதி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.

முந்தைய திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட பா.ஜனதா ஆட்சியில் தமிழகத்திற்கான வரி பகிர்வு அதிகரித்துள்ளது. திருமாவளவன் பூரண மதுவிலக்கு வேண்டும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநாடு நடத்தினார். அதை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றப் போகிறார். நடிகை கஸ்தூரி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு விட்டார். இருப்பினும் அவரை தீவிரவாதி போல காவல்துறையினர் நடத்துவது சரியா?. இது பாரபட்சமான நடவடிக்கை என்று அவர் கூறினார்.