
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான தருணம் ஆகும். அதுவும் 1 இது பெண்களுக்கு மிகவும் முக்கியமான வாழ்வியல் பகுதியாகும். ஒவ்வொரு பெண்ணும் திருமணத்தின் போது தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு மற்றொரு வீட்டிற்கு செல்வது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த நேரத்தில் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தோடு பெண் பிள்ளைகளை அனுப்பி வைப்பது ஒரு நிகழ்வாகும். இதனை தற்போது வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர்.
அதே போன்று சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், திருமணம் ஆன புது மணப்பெண் தனது குடும்பத்தினரை பிரியும் பொழுது கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். ஆனால் கேமராவை இதனை பதிவு செய்ய திருப்பிய போது உடனே சிரித்துக் கொண்டே நடனம் ஆடினார். மணமகளின் இந்த செய்கை குறித்து பலரும் இரண்டு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
View this post on Instagram