இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு உதவி செய்வதே பெரிய விஷயம். அப்படி உதவி செய்யும்போது அதனை மறவாமல் காலத்திற்கும் நன்றியோடு இருப்பது அதைவிட பெரிய விஷயம். அப்படி ஒருவர் நமக்கு செய்யும் உதவியை நினைத்து அவருக்கு நன்றி தெரிவிப்பது எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு தீயணைப்பு துறை வீரர் ஒருவர் கடந்த 21 வருடங்களுக்கு முன்பாக ஒரு வீட்டின் தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு சென்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை தீ விபத்தில் இருந்து காப்பாற்றினார்.

அந்தப் பெண் குழந்தை தற்போது வளர்ந்த நிலையில் 20 வயது ஆகிறது. அந்தப் பெண் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த நிலையில் தன்னுடைய பட்டமளிப்பு விழாவிற்கு தன் உயிரை காப்பாற்றிய அந்த தீயணைப்பு வீரரை தேடி கண்டுபிடித்து அழைப்பு கொடுத்து அவரை வரவழைத்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.