பிரான்ஸ் நாட்டில் தன்னுடைய வளர்ப்பு மகளை ஒரு தந்தை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்த தந்தைக்கு 20 வருடங்கள் வரை சிறை தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது தன்னுடைய 13 வயது மகளை 38 வயதான அந்த தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதோடு தனக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான நபர்களுக்கும் தன் மகளை விருந்தாக்கினார்.

அதாவது அந்த நபர்களுடன் உடலுறவு கொள்ளுமாறு தன்னுடைய மகளை அவர் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் 38 வயதுடைய அந்த தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 20 வருடங்கள் வரை சிறை தண்டனை ‌ கொடுத்துள்ளது. மேலும் அந்த நபர் தன்னுடைய மகள் வயது வந்தவர் எனவும் அவள் சம்மதித்தன் பெயரில்தான் அனைவருடனும் உடலுறவு கொண்டதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.