மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்வு நடந்து முடிந்த நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில் 234 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 132 இடங்களிலும், அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் 31 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், சரத்பவர் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாளையுடன் மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையும் நிலையில் இன்றே புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் மகாயுதி கூட்டணியில் முதல்வரை தேர்வு செய்வதில் பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது அந்த மாநிலத்தின் பாஜக தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ் முதல்வராக வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த முறையும் எனக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கிறாராம். அதே நேரத்தில் அஜித் பவார் கட்சி தேவேந்திர பாட்னாவிஸ் முதல்வரானால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறிவிட்டார்.

இதன் காரணமாக புதிய முதல்வரை தயவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக நாளை புதன்கிழமை புதிய முதல்வர் அறிவிக்கப்படாவிடில் ஜனாதிபதி ஆட்சி, மகாராஷ்டிராவில் அமையலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய ஆளுநர் மனது வைத்தால் கால அவகாசம் கொடுக்கப்படும் என்பதால் இது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மகராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற ஒரு கட்சிக்கு மொத்தம் 28 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் எந்த கட்சிக்கும் அத்தனை எம்எல்ஏக்கள் இல்லாததால் தற்போது எதிர்க்கட்சி இல்லாமல் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.