உத்தர் பிரதேஷ் மாநிலம் பரேலி பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் கல்பூர்-ததாகஞ்ச் சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. Google Map உதவியுடன் சென்று கொண்டிருந்த அந்த கார் கட்டிப்முடிக்கப்படாத பாலம் ஒன்றின் மீது பயணித்து கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்தவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் சேதம் அடைந்த பாலம் இதுவரை சரி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. சேதமடைந்த பாலம் குறித்து google மேப்பில் அப்டேட் ஆகாதது தான் விபத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.