மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திகன்காட்டில் பகுதியில் பார்கவான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில மக்கள் போராட்டம் நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது அவர் இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். அந்த வாலிபரை அடித்த பெண் காவல் அதிகாரியின் பெயர் ஆயா அனுமேஹா குப்தா. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில் திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்து விட்டார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக கார் ஓட்டுனர் ஒருவர் தாக்கியதில் இருவர் உயிரிழந்ததுள்ளனர். இது தொடர்பாக புகார் பதிவு செய்ய காவல்துறையினரிடம் அந்த பகுதி மக்கள் வலியுறுத்திய நிலையில் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் காவல் அதிகாரி வாலிபரை கன்னத்தில் அடித்த நிலையில் பதிலுக்கு அவர் கன்னத்திலும் அடி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.