தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை தேதியை கடந்த 23-ம் தேதி  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 10ஆம் தேதி தமிழ் தேர்வும், டிசம்பர் 11ஆம் தேதி விருப்ப பாடமும், டிசம்பர் 12ஆம் தேதி ஆங்கில தேர்வும், டிசம்பர் 16ஆம் தேதி கணித தேர்வும், டிசம்பர் 19ஆம் தேதி அறிவியல் தேர்வும், டிசம்பர் 23ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது.

இதே போன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன்படி டிசம்பர் 9-ம் தேதி தமிழ் தேர்வும், டிசம்பர் 10ஆம் தேதி ஆங்கில தேர்வும், டிசம்பர் 12-ம் தேதி கம்யூனிகேடிவ், இங்கிலீஷ் மற்றும் புள்ளியியல் பாட தேர்வுகளும், டிசம்பர் 14ஆம் தேதி பயாலஜி, பாட்டனி, வரலாறு உள்ளிட்ட தேர்வுகளும், டிசம்பர் 17ஆம் தேதி கணிதம், ஜூவாலஜி மற்றும் காமர்ஸ் தேர்வுகளும், டிசம்பர் 20ஆம் தேதி கெமிஸ்ட்ரி, அக்கவுண்டன்சி மற்றும் ஜியோகிராபி உள்ளிட்ட தேர்வுகளும், டிசம்பர் 21ஆம் தேதி பிசிக்ஸ், எகனாமிக்ஸ் உள்ளிட்ட தேர்வுகளும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியான நிலையில் பள்ளி கல்வித்துறை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை விடுத்துள்ளது. அதாவது அரையாண்டு தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவ மாணவிகளிடம் எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி மாணவ மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.