
சென்னை திருவல்லிக்கேணியில் லிப்ட் அமைப்பதற்காக சுமார் 10 அடி ஆழமுள்ள குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிலில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் வனமாலி(8) என்ற சிறுமி ஒருவர், அந்த குழியின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் விளையாடிக் கொண்டிருந்த பந்து குழியில் விழுந்தது. இதனை எடுக்க முயன்ற சிறுமி தடுமாறி குழிக்குள் விழுந்தார். இதையடுத்து அந்தச் சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தச் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருவல்லிக்கேணி தேரடி தெருவில் அறநிலைத்துறைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்திற்கு லிப்ட் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது தெரியவந்தது.