திருமணம் என்பது பழங்காலங்களில் கோவில்களில் அல்லது வீடுகளில் மிகவும் எளிமையாக நடைபெறும். ஆனால் இன்று டிஜிட்டல் காலம் என்பதால் பலரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப திருமணங்களில் ஆடல், பாடல், வித்தியாசமான உணவு முறைகள், மணமேடைகள், மண்டப அலங்காரங்கள் என வெகு விமர்சையாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இதைக்காட்டிலும் வித்தியாசமாக சிலர் தங்களது திருமணங்களை ஆகாயத்திலும், கடலிலும் கொண்டாடுகின்றனர். அதுபோன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் தேங்காய் விருந்து நடைபெற்றது.

அதாவது திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சாதாரணமாக டைனிங் டேபிள் முறையில் விருந்தளிக்காமல், கல்யாண வீட்டார் தேங்காய் விற்பனையாளர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, பொள்ளாச்சி தேங்காய் நகரம் என்பதாலும் தேங்காய் வடிவிலான இருக்கைகள் கொண்ட டைனிங் டேபிள் அமைக்கப்பட்டு விருந்தினர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. இதனை கல்யாணத்திற்கு வந்த விருந்தினர்கள் மிகவும் ரசித்து உணவு சாப்பிட்டனர். மேலும் சிலர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.