
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு துறையின், துணை காவல் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் தண்டோடியா. இவருக்கு நேற்று சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து ஒரு கால் வந்துள்ளது. இதையடுத்து காலில் பேசியவர், அவரை காவல் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். அப்போது உங்களது கிரெடிட் கார்டில் இருந்து 1,11,930 ரூபாய் சந்தேகத்திற்குரிய பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது.
இதன் காரணமாக உங்கள் மீது மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களிடம் இருந்து வாக்குமூலம் வாங்க வேண்டும். அதனால் அந்த மோசடி கும்பல் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது காவல்துறை சீருடைகளில் இருந்து ராஜேஷ் தண்டோடியாவை பார்த்த அந்த நபர், காலை துண்டித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இத்தகைய சைபர் கிரைம் மோசடியிலிருந்து தப்பாவும், அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துணை காவல் ஆணையர் இதனை பகிர்ந்து உள்ளார்.