
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி காதர்ஜெண்டா தெருவில் இருக்கும் கிளினிக்கில் நோயாளிகளுக்கு போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ வாழ்வில் சிவப்பிரியா லோகேஸ்வரன் வந்தவாசி தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, முருகன் ஆகியோர் அந்த கிளினிக்கிற்கு சென்று திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது ராய் என்பவர் நோயாளிகளுக்கு மூலம் மற்றும் பவுத்திரம் நோய்க்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவர் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அலுவலர் சிவப்பிரியா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராயை கைது செய்தனர். அவரை போலீசார் நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.