தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டினை துர்கா தேவி என்பவர் தொகுத்து வழங்கினார். இவருடைய குரல் ஓங்கி ஒழித்த நிலையில் அதன் பிறகு அவர் கவனம் பெற்றார்.

இந்நிலையில் இவர் தற்போது கழுத்தில் தவெக துண்டு மற்றும் காரில் தவெக கொடியுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இவர் முதல் மாநாட்டினை தொகுத்து வழங்கிய நிலையில் அவருடைய  குரலை பலரும் ட்ரோல் செய்த நிலையில் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தவெக கொடியுடன் வலம் வருகிறார். மேலும் இவர் நேற்று வெளியிட்ட பதிவில் புகைப்படத்துடன் 2026 இலக்கை நோக்கி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.